பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

By செய்திப்பிரிவு

பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் உதவி பாதுகாப்பு அதிகாரி மற்றும் பாதுகாவலர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் டிச.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 92

பணி: உதவி பாதுகாப்பு அதிகாரி

காலியிடங்கள்: 19

பணி: பாதுகாவலர்

காலியிடங்கள்: 73

வயது வரம்பு

6.12.2019 தேதியின் படி, குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், அதிகபட்சமாக பொதுப் பிரிவினர் 27 வயதுக்குள்ளும், எஸ்.சி/எஸ்.டி பிரிவினர் 32 வயதுக்குள்ளும், ஓபிசி பிரிவினர் 30 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.

தகுதி

உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலைப் பட்டமும், பாதுகாவலர் பணிக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை

எழுத்துத் தேர்வு, உடற்தகுதி, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

வருமான விவரம்

உதவி பாதுகாப்பு அலுவலர்: ரூ.35,400 மற்றும் மத்திய அரசின் சலுகைகள், படிகள்

பாதுகாவலர்: ரூ.18,000 மற்றும் மத்திய அரசின் சலுகைகள், படிகள்

விண்ணப்பக் கட்டணம்

உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ரூ.150, பாதுகாவலர் பணிக்கான விண்ணப்பம் ரூ.100, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், எஸ்.சி/எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை

https://recruit.barc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.12.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://recruit.barc.gov.in/barcrecruit/nbArchive.jsp?unit=ADV

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

வேலை வாய்ப்பு

3 months ago

மேலும்