சென்னை: திருமண புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் தொடர்பாக தொழில் முனைவோர் பயிற்சி சென்னையில் நாளை முதல் 10 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில், தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் திருமண புகைப்படம் எடுத்தல், வீடியோ எடிட்டிங் பயிற்சி மார்ச் 25 (நாளை) முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை 10 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி பயிற்சி வகுப்பு நடைபெறும்.
அரசு உதவிகள், மானியங்கள்: இதில் பாரம்பரிய புகைப்படம் எடுத்தல், திருமண புகைப்படம் எடுத்தல், புகைப்படத்தின் அடிப்படைகள், ஒளியமைப்பு, புகைப்பட நுட்பங்கள், உருவப் படங்களுக்கான நுட்பங்கள், ஆல்பம் வடிவமைப்பு, புகைப்பட மறுசீரமைப்பு, புகைப்பட குழுவை உருவாக்கி நிர்வகித்தல், புகைப்பட வணிகத்துக்கான வழிமுறைகள் ஆகியவை குறித்து கற்றுத் தரப்படும். இதற்கான அரசு உதவிகள், மானியங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
குறைந்தபட்ச கல்வி தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி. 18 வயது நிரம்பிய ஆர்வம் உள்ள தொழில் முனைவோர் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் பங்கேற்பவர்களுக்கு குறைந்த வாடகையில் தங்கும் வசதி செய்து தரப்படும். கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளம் அல்லது 8668108141, 8668102600 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறியலாம். முன்பதிவு அவசியம்.
அதேபோல, தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ், பேக்கரி பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி மார்ச் 26 முதல் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பேக்கரி பொருட்களின் மூலப்பொருட்கள், பலவகையான பன், பிஸ்கட், கேக் வகைகள், ரொட்டி உள்ளிட்டவை தயாரிக்க கற்றுத் தரப்படும்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
3 hours ago
வேலை வாய்ப்பு
5 days ago
வேலை வாய்ப்பு
15 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago