கோவையில் ஜன.24-ல் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

By இல.ராஜகோபால்

கோவை: தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் கோவையில் ஜனவரி 24-ம் தேதி நடக்கிறது. இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்படுகிறது.

ஜனவரி மாதத்திற்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஜனவரி 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெறும்.பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டப்படிப்பு முடித்த அனைத்து மனுதாரர்கள் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச் சான்றுகளின் நகல்களுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. அனுமதி இலவசம். பல முன்னணி தனியார் நிறுவனங்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தொழிலாளர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்படும்.

முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படாது. முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள் மற்றும் வேலை தேடும் மனுதாரர்கள் www.tnprivatejobs.tn.gov.in மற்றும் www.ncs.gov.in என்ற இணையதளங்களில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், மனுதாரர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரடியாக வருகை புரிந்தும் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 0422-2642388 என்ற தெலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

4 days ago

வேலை வாய்ப்பு

14 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்