சென்னை: ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒருங்கிணைந்த குருப்-4 தேர்வை எழுதிய விண்ணப்பதாரர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் அக்டோபர் 28-ம் தேதி தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது, மதிப்பெண், தரவரிசை மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் கணினி வழி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள் தங்கள் சான்றிதழ்களை நவம்பர் 9-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தேர்வாணையத்தின் இணையதளத்தின் ஒருமுறை பதிவு பிரிவு (ஒடிஆர்) வாயிலாக பதிவேற்றம் செய்யலாம்” என அவர் கூறியுள்ளார். குருப்-4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட ஆறே நாட்களில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
9 days ago
வேலை வாய்ப்பு
13 days ago
வேலை வாய்ப்பு
19 days ago
வேலை வாய்ப்பு
20 days ago
வேலை வாய்ப்பு
20 days ago
வேலை வாய்ப்பு
20 days ago
வேலை வாய்ப்பு
21 days ago
வேலை வாய்ப்பு
28 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago