சென்னை: சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துமனைகளில் முஸ்லிம் ஆண் நர்சுகளுக்கு வேலைவாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் மா.லதா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட செய்திக்குறிப்பு: சவுதி அரேபியா அமைச்சகத்தின் கீழ் இயங்கும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற முஸ்லிம் ஆண் நர்சுகள் தேவைப்படுகின்றனர். விண்ணப்பதாரர் பிஎஸ்சி நர்சிங் படித்திருக்க வேண்டும். குறைந்தட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். சம்பளத்துடன் உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவையும் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் தங்கள் சுயவிவர விண்ணப்பம் மற்றும் கல்விச் சான்றிதழ், பாஸ்போர்ட், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களை அக்டோபர் 24-ம் தேதிக்குள் ovemclmohsa2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.
பணிக்கு தேர்வுசெய்யப்படும் பணியாளர்களிடமிருந்து சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் வசூலிக்கப்படும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்தவொரு இடைத்தரகரோ அல்லது ஏஜெண்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவுசெய்து பயன்பெறலாம். வெளிநாட்டு வேலைகளுக்கான பணியிடங்கள் குறித்த விவரங்களை இந்நிறுவனத்தின் இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
28 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
3 months ago
வேலை வாய்ப்பு
3 months ago