சென்னை: மகளிர் சிறு, குறு தொழில்முனைவோருக்கான இலவச ஏற்றுமதி கருத்தரங்கம் வரும் செப்.11ம் தேதி சென்னை கிண்டியில் உள்ள MSME-DI அரங்கில் நடைபெறும் என்று,
தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச் சங்கத் தலைவர் கிருஷ்ணணா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக தொழில் பயிற்சிகள் மற்றும் தொழில் தொடங்க அனைத்து உதவிகளும் சேவை மனப்பான்மையுடன் அனைத்து மாவட்டங்களிலும் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வரும் செப்.11ம் தேதி (புதன்கிழமை) சென்னை கிண்டியில் MSME-DI ஆடிட்டோரியத்தில் காலை 9 மணி முதல் மதியம் 12.30 மணி வரை சிறு குறு தொழில் முனைவோருக்கான ஏற்றுமதி கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கின் சிறப்பு அம்சம் என்னவென்றால் ஏற்றுமதிக்கான நாடு மற்றும் ஏற்றுமதிக்கான பொருட்களை நாம் எவ்வாறு கண்டுபிடிப்பது, அவ்வாறு கண்டுபிடிப்பதன் மூலம் ஏற்றுமதியில் ஏற்படும் சிரமங்களை எவ்வாறு தவிர்ப்பது மற்றும் லைசன்ஸ் எடுப்பது, அதற்கான அடிப்படை விபரங்கள் அனைத்தும் கருத்தரங்கில் ஏற்றுமதி இறக்குமதி வல்லுனரால் பயிற்சி நடத்தப்படும்.இதற்கு எந்தவிதமான கட்டணமும் கிடையாது. சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள பெண்கள் இந்த கருத்தரங்கில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
கல்லூரி மாணவிகள் கலந்து கொள்ளும் பட்சத்தில் அவர்களுக்கு இ-சான்றிதழ் வழங்கப்படும். கலந்து கொள்ளும் மகளிர் கீழே குறிப்பிட்ட எண்ணுக்கு 9361086551,7871702700 குறுந்தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் . ஏற்றுமதியில் ஆர்வம் கொண்ட பெண்கள் தங்களது சிறு குறு பொருட்களை ஏற்றுமதி செய்யும் வாய்ப்பினை இதன் மூலம் பெறலாம். இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
6 days ago
வேலை வாய்ப்பு
13 days ago
வேலை வாய்ப்பு
14 days ago
வேலை வாய்ப்பு
23 days ago
வேலை வாய்ப்பு
27 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago