சென்னை: நேர்முகத் தேர்வுடன் கூடிய தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வெளியிடுகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த வாரம் வெளியிட்ட 2024-ம்ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதியதேர்வுக்கான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றது. அதில், நேர்முகத்தேர்வு கொண்ட தொழில்நுட்ப பணியிடங்களில் 50 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்புஆகஸ்ட் 30-ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான தேர்வு நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, தொழில்நுட்ப பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வருகிற வெள்ளிக்கிழமை வெளியிடுகிறது. இந்த பணியிடங்களுக்கான தேர்வுகள் நவம்பர் 18-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும். தேர்வு அட்டவணையில் எந்தெந்தபதவிகளுக்காக இந்த தேர்வு நடத்தப்பட இருக்கிறது என்ற விவரம் கொடுக்கப்படவில்லை. எனினும், மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலுவலர், தொல்லியல்துறை உதவி இயக்குநர், தொழிலாளர்நலத்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட குருப்-ஏ தரத்திலான பதவிகள் இந்த தேர்வில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பொது அறிவு தாள் தேர்வு, கட்டாய தமிழ்மொழி தகுதித்தேர்வு இரண்டும் பொதுவாக ஒருநாளிலும் குறிப்பிட்ட தொழில்நுட்ப பாடங்களுக்கான தேர்வு தனித்தனியாகவும் நடத்தப்படும்.
இதனிடையே ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளில் (நேர்முகத் தேர்வு) அடங்கிய பதவிகளுக்கான தேர்வு கடந்த 12,19, 20, 21-ம் தேதிகளில் கணினி வழித் தேர்வாக டிஎன்பிஎஸ்சி நடத்தியது. இதில் கடந்த 12-ம் தேதி நடந்த தமிழ் தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வுக்கான உத்தேச விடைகள் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. முறையீடு செய்ய விரும்பும் தேர்வர்கள் வருகிற 30-ம் தேதிக்குள் தேர்வாணைய இணைய தளத்தில் உள்ளஆன்சர் கீ சேலன்ஜ்” என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடுசெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர்: இதற்கிடையே, தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் தேர்வு முதல்முறையாக டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் தேர்வுக்கு கல்வித்தகுதியாக தமிழ் இலக்கியத்தில் முதுகலை பட்டப்படிப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இளங்கலை படிப்பும் தமிழ் இலக்கிய படிப்பாக இருக்க வேண்டும். இளங்கலையில் வேறு பாடம் படித்துவிட்டு முதுகலை மட்டும் தமிழ் இலக்கியம் படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க இயலாது.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
8 days ago
வேலை வாய்ப்பு
14 days ago
வேலை வாய்ப்பு
15 days ago
வேலை வாய்ப்பு
24 days ago
வேலை வாய்ப்பு
28 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago