சிறப்பு மருத்துவர், ஆலோசகர் பணி: சவுதி அரேபியாவில் வேலை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: சவுதி அரேபிய அமைச்சகத்தில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிய மருத்துவ ஆலோசகர் மற்றும் சிறப்பு மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள்.

முதுநிலை மருத்துவப் பட்டம் (எம்டி, எம்எஸ்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். 55 வயதுக்குள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

மேற்கண்ட பதவிகளுக்கு ஊதியத்துடன் உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவையும் வழங்கப்படும். கூடுதல் விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் புதிய இணையதளத்தில் (www.omcmanpower.tn.gov.in) அறிந்துகொள்ளலாம். மேலும் 044-22505886, 22502267 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு எந்தவொரு இடைத்தரகரோ, முகவரோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நேரடியாகப் பதிவுசெய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE