காலியிடங்களை நிரப்ப இறுதி கட்ட நேர்முகத்தேர்வு: ஏப்ரல் மாதத்தில் குருப்-2-ஏ தேர்வு பட்டியல்

By செய்திப்பிரிவு

சென்னை: குருப்-2 தேர்வு நேர்காணல் பதவிகளில் உள்ள 29 காலியிடங்களை நிரப்ப இறுதி கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என்றும் அதைத்தொடர்ந்து, நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு பட்டியல் ஏப்ரல் 2-வது வாரத்தில் வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குருப்-2 தேர்வில் நேர்காணல் கொண்ட பதவிகளில் உள்ள 161 காலியிடங்களுக்கு 2 கட்டங்களாக நேர்முகத் தேர்வு நடத்தப்பட்ட பின்னரும் இன்னும் 29 காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

நேர்காணல் பதவிகளில் உள்ள இடங்களை முழுவதுமாக நிரப்ப கடைசி கட்டமாக நேர்முகத்தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு தகுதியுள்ள தேர்வர்களுக்கு நேர்காணலில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும்.

சம்பந்தப்பட்ட தேர்வர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும். இதுகுறித்து அந்த தேர்வர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும். அவர்கள் ஒருமுறை பதிவு (OTR) வாயிலாக தங்கள் விருப்பத்தை தெரிவிக்க வேண்டும்.

நேர்காணல் பதவிகளுக்கான இந்த இறுதி நேர்முகத்தேர்வு நடத்தப்பட்ட பிறகு நேர்காணல் அல்லாத பதவிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தேர்வர்களின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

5 days ago

வேலை வாய்ப்பு

7 days ago

வேலை வாய்ப்பு

10 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்