சென்னை: அக்னிவீர் வாயு விமானப்படை தேர்வுக்கு தகுதியுள்ள இளைஞர்கள் விண்ணப்பிக்குமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அழைப்பு விடுத்துள்ளார்.
இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு தேர்வு வரும் மார்ச் 17-ம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு 2004 ஜன.2-ம் தேதி முதல் 2007 ஜூலை 2-ம் தேதி வரை பிறந்த திருமணமாகாத விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் பிளஸ் 2 தேர்வில் கணிதம், இயற்பியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரியில் 3 ஆண்டு டிப்ளமோ பொறியியல் படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in/ என்ற இணையதளத்தில் வரும் பிப்.6-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு decgc.chennai@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
2 days ago
வேலை வாய்ப்பு
3 days ago
வேலை வாய்ப்பு
7 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago