உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு 18-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

By செய்திப்பிரிவு

சென்னை: உதவி சிறை அலுவலர்கள் பணியிடங்களுக்கு 18-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் செயலாளர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறை சார்நிலைப் பணிகளில் அடங்கிய சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் உள்ள உதவி சிறை அலுவலர் (ஆண்கள் மற்றும் பெண்கள்) பதவிகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வுக்கான மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் செப்.14-ம் தேதி தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், உதவி சிறை அலுவலர் பதவிகளுக்கு சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜன.18-ம்தேதி தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

சான்றிதழ்கள் சரிபார்ப்புக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

5 days ago

வேலை வாய்ப்பு

6 days ago

வேலை வாய்ப்பு

10 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்