புதுச்சேரி: புதுச்சேரியில் நாளை மறுநாள் (நவ. 18-ம் தேதி) பிரெஞ்சு வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், தேர்வானால் மாதம் ரூ. 35 ஆயிரம் ஊதியம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவர்கரை நகராட்சி நகர வாழ்வாதார மையம் மற்றும் நவயுகா கன்சல்டன்சி சர்வீஸின் சார்பில் நவ.18-ம் தேதி, புதுச்சேரி கொட்டுபாளையம், நவீன சுகாதார மீன் அங்காடி வளாகத்தில் உள்ள நகர வாழ்வாதார மையத்தில் சென்னையில் உள்ள சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்திற்கான பிரெஞ்சு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாம், நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் சதர்லேண்ட் குளோபல் சர்வீசஸ் நிறுவனத்தின் பிரெஞ்சு வாடிக்கையாளர் சேவை பணிக்காக நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் பிளஸ் டூ தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் இளநிலை பட்டம் பெற்ற நன்கு பிரெஞ்சு பேச தெரிந்த ( B2 நிலை மற்றும் அதற்கும் மேலே ) இளையோர் அனைவரும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.
இதில் தேர்வு செய்யப்படும் அனைவருக்கும் மாத ஊதியமாக ரூ.35 ஆயிரம் முதல் வழங்கப்படும். இந்த வேலையில் சேர விருப்பமுள்ளவர்கள், நாள்தோறும் 9 மணிநேரம் வேலை செய்ய வேண்டும். மேலும் வாரம் இரண்டு நாட்கள் விடுப்பு அளிக்கப்படும். அடிப்படை தொழில்நுட்ப திறன் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு 0413-2962001, 98434 42999, 78068 01160 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ‘oulgaretcc@gmail.com’ என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
7 days ago
வேலை வாய்ப்பு
14 days ago
வேலை வாய்ப்பு
15 days ago
வேலை வாய்ப்பு
24 days ago
வேலை வாய்ப்பு
28 days ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
1 month ago
வேலை வாய்ப்பு
2 months ago
வேலை வாய்ப்பு
2 months ago