விஐடி சென்னை, ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ - அரசு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வெப்பினார் தொடர்: இணையவழியில் வரும் 14, 15-ம் தேதிகளில் நடைபெறுகிறது

By செய்திப்பிரிவு

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை கல்லூரி மாணவர்கள் நாட்டுக்கு சேவைபுரியும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறியும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக் கலை ஆகியவற்றில் உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை-தேசம் காக்கும் நேசப் பணிகள்’ என்ற இணையவழி வெப்பினார் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4 மணிக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்துள்ளது.

வரும் சனிக்கிழமை (அக். 14) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெப்பினாரில், பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அறிவியல் அதிகாரி ஆர்.தீபக் ‘யுபிஎஸ்சி-இன்ஜினீயரிங் சர்வீஸ் தேர்வு: தயாரிப்பும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெப்பினாரில், ஓய்வுபெற்ற கர்னல் செல்வகுமார், ‘யுபிஎஸ்சி-என்டிஏ&சிடிஎஸ் தேர்வுகள்: தயாரிப்பும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். இந்த இரு வெப்பினார் நிகழ்வு
களையும் ஒருங்கிணைத்து, ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு கலந்துரையாட உள்ளார்.

நிகழ்வில் பங்கேற்க... இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் https://www.htamil.org/DKNP004 என்ற லிங்க்-ல் அல்லது இத்துடன் உள்ள க்யூஆர்கோடு மூலமாக பதிவுசெய்து கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு 9500165460 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

7 days ago

வேலை வாய்ப்பு

14 days ago

வேலை வாய்ப்பு

15 days ago

வேலை வாய்ப்பு

24 days ago

வேலை வாய்ப்பு

28 days ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

1 month ago

வேலை வாய்ப்பு

2 months ago

வேலை வாய்ப்பு

2 months ago

மேலும்