ஐடி துறையில் 5ஜி மூலம் அதிக வேலை உருவாகும்: டீம்லீஸ் நிறுவன ஆய்வில் தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் 5ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. 5ஜி சேவை இந்தியாவில் நிறுவனங்களில் வளர்ச்சியிலும் வேலை உருவாக்கத்திலும் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து டீம்லீஸ் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும், வெவ்வேறு துறைகளின் கீழ் 247 நிறுவனங்களிடம் மேற்கொண்ட கருத்துக் கேட்பு அடிப்படையில் டீம்லீஸ் நிறுவனம் இந்த ஆய்வறிக்கையை உருவாக்கியுள்ளது.

ஐடி, வங்கி, நிதி நிறுவனங்கள் 5ஜி சேவை மூலம் அதிக பலன்களை பெறும். அத்துறைகளின் வேலை உருவாக்கத்திலும், திறன் மேம்பாட்டிலும் 5ஜி பெரும் தாக்கம் செலுத்தும் என்று கருத்துக் கேட்புக்கு உட்படுத்தப்பட்ட 80 சதவீத நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கல்வி, கேமிங், இ-காமர்ஸ் துறைகளின் போக்கில் 5ஜி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE