சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 1) சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் கடந்த மாதம் 4-ம் தேதி ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உயர்ந்தும் குறைந்தும் வந்தது. நீண்ட நாட்களுக்கு பின்னர் மே 26-ம் தேதி தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருந்தது. மே 31-ம் தேதி மீண்டும் ரூ.45 ஆயிரத்தை எட்டியது.
இந்தநிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வியாழக்கிழமை) கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,5620-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,960-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,576-க்கு விற்பனையாகிறது.
இதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு 0.80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.60-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,600 ஆக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago