மே 27, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 27) சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம் மே 4-ம் தேதி சவரனுக்கு ரூ.352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதையடுத்து, தங்கம் விலையில் பெரிய அளவில் மாற்றம் ஏதும் இல்லை. இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெள்ளிக்கிழமை தங்கம் விலை 45 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்திருந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (சனிக்கிழமை) கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.5,600-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.44,800-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.48,560-க்கு விற்பனையாகிறது.

இதேபோல், வெள்ளி கிராமுக்கு 0.80 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,000 ஆக இருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 hours ago

வணிகம்

10 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

13 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

21 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

7 days ago

மேலும்