இன்றைய டிஜிட்டல் உலகில் எண்ணற்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் தங்கள் சேவையை பயனர்களுக்கு வழங்கி வருகின்றன. இந்தியாவில் மட்டும் சுமார் 57 ஸ்ட்ரீமிங் சேவை தளங்கள் இருப்பதாக தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது கடந்த மார்ச் மாதம் வெளியான தகவல். இந்த நிலையில் இந்தியாவில் டிவி ஆப்பிரேட்டர்கள், இணையதள சேவை வழங்குநர்கள் மற்றும் டெலிகாம் நிறுவனங்கள் என அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைத்து இயங்கும் ஓடிடி ‘அக்ரிகேட்டர்’ நிறுவனங்களின் சேவைக்கு டிமாண்ட் அதிகரித்து வருவதாக தெரிகிறது.
ஓடிடி பிளே, YuppTV ஸ்கோப் மற்றும் டாடா பிளே பிஞ்ச் போன்றவை இதற்கு உதாரணம். மேலும், இந்த தளங்களுக்கு தடம் பதித்த மீடியா நிறுவனங்கள் வழங்கும் ஆதரவும் அதிகமாக இருக்கிறதாம். இதன் மூலம் பயனர்களுக்கு ஒரே நேரத்தில் பல தளங்களுக்கு சந்தா செலுத்துவது மிச்சம் ஆகும் எனவும் சொல்லப்படுகிறது.
சோனி LIV, ZEE5, Lionsgate Play மற்றும் அதிகம் பிரபலமில்லாத ஸ்ட்ரீமிங் தள சேவைகளை ஒரு சேர வழங்கி வருகிறது ஓடிடி பிளே. மேற்கூறிய ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியே சந்தா கட்டணம் செலுத்துவதை காட்டிலும் சுமார் 12 மடங்கு இதன் சந்தா கட்டணம் மலிவு எனவும் சொல்லப்படுகிறது. இப்படியே பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ற ஓடிடி அக்ரிகேட்டர் சேவையை தெரிவு செய்து, சந்தா செலுத்தி, அதில் ஸ்ட்ரீம் ஆகும் கன்டென்டுகளை பார்க்கலாம்.
» பங்குச்சந்தை | சென்செக்ஸ் 175 புள்ளிகள் உயர்வு
» இருமல் மருந்து ஏற்றுமதியாளர்களுக்கு கெடுபிடி: ஜூன் 1 முதல் மத்திய அரசு லேப்களில் சோதனை கட்டாயம்
“ஆண்டுதோறும் இதற்கான சந்தை வாய்ப்பு என்பது பெருகி கொண்டே வருகிறது. இது சந்தையில் உள்ள தேவையை தெளிவாக சுட்டிக் காட்டுகிறது” என ஓடிடி பிளே நிறுவனர் அவினாஷ் முதலியார் தெரிவித்துள்ளார். இருந்தாலும் இதில் ஒரு சில கன்டென்டுகள் கிடைக்கப் பெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எளிய விநியோகம்: ஓடிடி பிளே போன்ற அக்ரிகேட்டர் நிறுவனங்கள் பல தளங்களின் சேவையை ஒருங்கிணைத்து வழங்குவதால் பயனர்களிடம் இதை சந்தை படுத்துவதும், விநியோகிப்பதும் எளிது என சொல்லப்படுகிறது. இருந்தாலும் அமேசான் ப்ரைம், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற முன்னணி தளங்களை இந்த அக்ரிகேட்டர்கள் வழங்குவதில்லை. அதையும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் மாதாந்திர டெலிகாம் கட்டணத்தை பயனர்கள் செலுத்தும் போது சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனங்கள் சில ஸ்ட்ரீமிங் தள சேவையை பயனர்களுக்கு வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
மொத்தமாக பல ஸ்ட்ரீமிங் சேவைகள் வேண்டும் என பயனர்களும் டெலிகாம் நிறுவனங்களிடம் கோரிக்கை வைத்து வருவதாக தெரிகிறது. மறுபக்கம் முறையான அனுமதி இல்லாமல் சில தளங்களின் சேவைகள் ஸ்ட்ரீம் செய்யப்படுவதாகவும். சில நிறுவனங்கள் பிராட்பேண்ட் மற்றும் டிவி ஆப்பிரேட்டர்கள் உடன் இணைந்து மோசடியில் ஈடுபடுவதாகவும் தகவல். அது குறித்து அறிந்து கொண்ட சம்பந்தப்பட்ட ஸ்ட்ரீமிங் தளங்கள் அதை நிறுத்துவதாகவும் தெரிகிறது.
ஸ்திரத்தன்மை: ஓடிடி அக்ரிகேட்டர்களின் எழுச்சி ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு சங்கடம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக கன்டென்டின் தரத்திற்கு ஏற்ற தொகையை ஓடிடி ஸ்ட்ரீமிங் தளங்கள் நிர்ணயம் செய்வதில் சிக்கல் எழுவதாக சொல்லப்படுகிறது.
“ஓடிடி தளங்களுக்கான பெரும்பாலான சந்தாதாரர்கள் டெலிகாம் நிறுவனங்களின் ரீசார்ஜ் பிளான்களில் இருந்துதான் வருகிறது. அதற்கான சந்தாவை சேர்த்து இந்த பிளான்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், இதில் எத்தனை பயனர்கள் கணக்கை ஆக்டிவேட் செய்கிறார்கள்? அவர்களது என்கேஜ்மெண்ட் என்ன? என்பதை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது. இப்போதைக்கு இது தொடக்க நிலை தான். பயனர்களின் என்கேஜ்மெண்ட்டை பொறுத்தே இந்த தொழிலின் ஆரோக்கியம் இருக்கும்” என்கிறார் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தின் கன்டென்ட் பிரிவு துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில்.
“இந்த துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி மற்றும் பயனர்களின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை நாம் நிச்சயம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். குறைந்த கட்டணத்தில் திரளான பயனர்களை சென்றடைய இந்த பண்டில் பிளான்கள் உதவும். இருந்தாலும் இதன் இலக்கு என்னவென்றால் அந்த பயனர்களை நேரடியாக அந்த தளத்தின் பயனார்களாக மாற்றுவதில் இருக்கும் என்பதே விருப்பமாக இருக்கும்” என ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா சொல்கிறார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
19 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
6 days ago
வணிகம்
10 days ago
வணிகம்
10 days ago