தேசிய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன விருது: மே 31-க்குள் விண்ணப்பிக்கலாம்

By செய்திப்பிரிவு

சென்னை: உள்நாடு மற்றும் சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் இந்திய தொழில்முனைவோர்கள் சிறந்த படைப்புடன் கூடிய புதுமையான பொருட்களை உருவாக்கி வருகின்றனர்.

இதுபோன்ற குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவித்து அவர்களுடைய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், தேசிய அளவிலான விருதுகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.

அத்துடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக மாநிலம், யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் முன்னோடி மாவட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய அளவில் தரவரிசைப்படுத்தப்படுகிறது.

அதேபோல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் அளிப்பதில் சிறந்து விளங்கியமைக்காக வங்கிகளும் தரவரிசைப்படுத்தப்படுகின்றன.

அந்த வகையில், 4 பிரிவுகளில் விருது வழங்கப்படுகிறது. இதன்படி, தொழில்முனைவோர் விருது அல்லது உற்பத்தி தொழில்முனைவோர், சேவை தொழில்முனைவோர் மற்றும் தொழில்துறையின் சிறப்புப் பிரிவு மாநில விருது, மாவட்ட விருது, வங்கி விருதுகள் வழங்கப்படும்.

இவ்விருதுகளுக்கான விண்ணப்பங்களை https://dashboard.msme.gov.in/na/Ent_NA_Admin/Ent_index.aspx. என்ற இணையதளம் மூலம் பெறலாம்.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் 31-ம் தேதி. மேலும் கூடுதல் விவரங்களுக்கு 044-22501011/12/13/14 என்ற தொலைபேசி எண்களிலும், dcdi-Chennai@dcmsme.gov.in என்ற மின்னஞ்சலிலும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE