ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்பி ஹிந்துஜா காலமானார்

By செய்திப்பிரிவு

லண்டன்: ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் எஸ்பி ஹிந்துஜா காலமானார். அவருக்கு வயது 87.

பிரிட்டனின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமத்தில் ஒன்று ஹிந்துஜா குரூப். இந்தியா, ஐரோப்பாவிலும் ஹிந்துஜா குரூப்பின் வர்த்தகம் சாம்ராஜ்ஜியம் பெரிய அளவில் உள்ளது. இதனை வழிநடத்தி வந்தவர் ஹிந்துஜா குழுமத்தின் நான்கு சகோதரர்களில் மூத்தவரான ஸ்ரீசந்த் பிரேமானந்த் ஹிந்துஜா அலைஸ் எஸ்பி ஹிந்துஜா. இவர், சில காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தநிலையில் இன்று இங்கிலாந்து தலைநகர் லண்டனில் காலமானார்.

1935ல் அன்றைய பிரிட்டிஷ் இந்தியாவுக்கு கீழ் இருந்த சிந்து மாகாணத்தில் உள்ள கராச்சியில் பிறந்தவர் எஸ்பி ஹிந்துஜா. மும்பை கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றுள்ளார். ஹிந்துஜா குழுமத்துக்கு அச்சாரமிட்டவர் எஸ்பி ஹிந்துஜாவின் தந்தையே எனலாம். அந்தக் காலத்திலேயே, அவரின் தந்தை பம்பாய் மற்றும் ஈரானில் வர்த்தகம் செய்தவர். இந்தியாவில் இருந்து ஈரானுக்கு வெங்காயம், உருளைக்கிழங்கு போன்ற உணவுப் பொருள்கள் மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றை வர்த்தகம் செய்துவந்தார்.

தந்தையின் அடிச்சுவட்டை பின்பற்றி, தந்தையின் ஜவுளி மற்றும் வர்த்தகத் தொழில்களை கவனித்து கொள்வதன் மூலம் எஸ்பி ஹிந்துஜா தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். சினிமா விநியோக தொழிலையும் இவர் மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

3 mins ago

வணிகம்

14 hours ago

வணிகம்

14 hours ago

வணிகம்

15 hours ago

வணிகம்

18 hours ago

வணிகம்

23 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

மேலும்