சென்செக்ஸ் 35 புள்ளிகள் வீழ்ச்சி

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்தது. சென்செக்ஸ் 35 புள்ளிகள் (0.06 சதவீதம்) சரிவடைந்து 61,904 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8 புள்ளிகள் (0.05 சதவீதம்) சரிந்து 18,306 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் இன்றைய வர்த்தகம் ஏற்றத்துடனேயே தொடங்கிய போதிலும் வர்த்தக நேரத்தில் நிலையில்லாத தன்மையை அடைந்தது. காலை 10:09 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வடைந்து 61,966.73 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 10.60 புள்ளிகள் சரிந்து 18,304.50 ஆக இருந்தது.

அமெரிக்க பணவீக்க அறிக்கை சாதகமாக இருந்த போதிலும், சில நிறுவனங்களின் பாதகமான காலாண்டு அறிகைகள், எல் அண்ட் டி, டாக்டர் ரெட்டிஸ் பங்குகள் சரிவின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வீழ்ச்சியில் நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 35.68 புள்ளிகள் சரிவடைந்து 61,904.52 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.55 புள்ளிகள் சரிந்து 18,306.55 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், என்டிபிசி, இன்டஸ்இன்ட் பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி, டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்சர்வ், பவர் கிரிடு கார்ப்ரேஷன், ஐசிஐசிஐ பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எம் அண்ட் எம், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி பங்குகள் உயர்வடைந்திருந்தன. எல் அண்ட் டி, ஐடிசி, பாரதி ஏர்டெல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீல், இன்போசிஸ், டெக் மகேந்திரா, நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், கோடாக் மகேந்திரா பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

6 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

9 days ago

வணிகம்

9 days ago

மேலும்