அதிக டிமாண்ட் உள்ள 10 பணித் திறன்கள்: உலக பொருளாதார மன்றம்

By செய்திப்பிரிவு

உலக பொருளாதார மன்றம் அண்மையில் ‘Future of Jobs Report 2023’ என்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் அடுத்த 5 ஆண்டுகளில் (வரும் 2027-க்குள்) சுமார் 23 சதவீத பணிகள் மாற்றம் காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 11 மில்லியனுக்கும் மேலான ஊழியர்களை கொண்டு இயங்கி வரும் சுமார் 800 நிறுவனங்கள் கொடுத்த உள்ளீட்டின் அடிப்படையில் சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

கல்வி, விவசாயம் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் போன்ற துறைகளில் பெரிய அளவில் வளர்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஏஐ, மெஷின் லேர்னிங் வல்லுநர்கள் போன்றவற்றிலும் வேலைவாய்ப்பு பெருகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக டிமாண்ட் உள்ள 10 பணித் திறன்கள்

அனலிட்டிக்கல் திங்கிங், கிரியேட்டிவ் திங்கிங், தொழில்நுட்பம் சார்ந்த புலமை, கற்றல் சார்ந்த ஆர்வம், மீள்தன்மை, சிஸ்டம் திங்கிங், ஏஐ மற்றும் பிக் டேட்டா, விழிப்புணர்வு, திறன் மேலாண்மை, சர்வீஸ் ஓரியன்டேஷன் மற்றும் வாடிக்கையாளர் சேவை என இந்த பத்து பணித் திறன்களுக்கு டிமாண்ட் இருப்பதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE