மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 694 புள்ளிகள் (1.13 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 61,054 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 186 புள்ளிகள் (1.02 சதவீதம்) வீழ்ந்து 18,069 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் இன்றைய வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கின. காலை 09:37 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 266.49 புள்ளிகள் சரிவடைந்து 61,482.76 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 79.00 புள்ளிகள் சரிந்து 18,176.80 ஆக இருந்தது.
உலகளாவிய வங்கி நெருக்கடிகள் குறித்த அச்சம், ஹெச்டிஎஃப்சி இரட்டை பங்குகளின் விற்பனை நெருக்கடி காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. ஹெச்டிஎஃப்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகியவைகளின் இணைப்பினைக் கணக்கிடும் போது, சர்வதேச குறியீட்டு வழங்குனரான எம்எஸ்சிஐ 0.5 சரிசெய்தல் காரணியைப் பயன்படுத்தும் என்று தகவல்கள் தெரிவித்தன. இதனால் ஹெச்டிஎஃப்சி இரட்டை பங்குகள் 5080 சதவீதம் வரை வீழ்ச்சியைடந்தது. இதனால் ஏற்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் தலா 1 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 694.96 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 61,054.29 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி188.05 புள்ளிகள் சரிந்து 18,067.75 ஆக இருந்தது.
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை டைட்டன் கம்பெனி, அல்ட்ரா சிமெண்ட்ஸ், மாருதி சுசூகி, நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ், பவர் கிரிடு கார்ப்பரேஷன், எல் அண்ட் டி, ஐசிஐசிஐ பேங்க், டிசிஎஸ் பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, இன்டஸ்இன்ட் பேங்க், டாடா ஸ்டீல், எம் அண்ட் எம், என்டிபிசி, இன்போசிஸ், விப்ரோ, பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், கோடாக் மகேந்திரா பேங்க், டெக் மகேந்திரா பேங்க், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், பாரதி ஏர்டெல், ஆக்ஸிஸ் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
1 hour ago
வணிகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago