சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 5) சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ரூ.46,200-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் கடந்த மாதம் 22, 23 ஆகிய இரண்டு நாட்களாக தங்கம் விலை பவுனுக்கு ரூ.480 குறைந்து இருந்தது. இதனால் நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். இதனைத் தொடர்ந்து. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் புதன்கிழமை அதிரடியாக ரூ.728 உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை சவரனுக்கு ரூ. 352 அதிகரித்து, ரூ.46,000 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க மத்திய வங்கி புதன்கிழமை தனது வட்டி விகிதத்தை மீண்டும் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியதன் காரணமாக,பங்குச்சந்தைகளில் நிலையில்லாத தன்மை நிலவி வருவதால், சர்வதேச அளவில் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,775-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,200-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,984-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி விலை 90 காசுகள் உயர்ந்து ரூ.83.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.83,700-ஆக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
6 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago