எஸ்பிஐ சென்னை வட்ட தலைமை பொதுமேலாளராக ரவி ரஞ்சன் பதவியேற்பு

By செய்திப்பிரிவு

சென்னை: பாரத ஸ்டேட் வங்கி சென்னை வட்டத்தின் தலைமை பொது மேலாளராக ரவி ரஞ்சன் பதவியேற்றுள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் வங்கி செயல்பாடுகளை மேற்பார்வையிடும் பொறுப்பை ரவி ரஞ்சன் மேற்கொள்வார்.

ரவி ரஞ்சன், வங்கித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ளவர். இவர் 1991-ம் ஆண்டில் தகுதிகாண் அதிகாரியாக பாரத ஸ்டேட் வங்கியில் சேர்ந்தார். எஸ்பிஐ ஹாங்காங் கிளையின் துணைத் தலைவர், கார்ப்பரேட் மையத்தின் துணை பொது மேலாளர்-ஈக்யுடி, பெங்களூருவின் பொது மேலாளர் மற்றும் எஸ்பிஐ கேப்பிடல் மார்க்கெட்ஸ் தலைவர் மற்றும் சிஓஓ போன்ற பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.

வங்கித் துறையிலுள்ள தனது விரிவான அறிவு மற்றும் நிபுணத்துவத்துடன், ரவி ரஞ்சன் எஸ்பிஐ சென்னை வட்டத்தை மேலும் உயரத்துக்கு இட்டுச் செல்வார். இவ்வாறு எஸ்பிஐ தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

10 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

மேலும்