கிருஷ்ணகிரி: வேப்பனப்பள்ளி பகுதியில் பீர்க்கங்காய் மகசூலும், விலையும் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக, ஆந்திர மாநில எல்லையையொட்டியுள்ள வேப்பனப்பள்ளியில் காய்கறி பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் குறிப்பாக, வேப்பனப்பள்ளி, கொங்கனப்பள்ளி, பண்ணப்பள்ளி, மாணவரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், கொல்லப்பள்ளி, சிகரமானப்பள்ளி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பீர்க்கங்காய் சாகுபடியில் அதிக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு அறுவடையாகும் பீர்க்கங்காய், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் குப்பம், சித்தூர் மற்றும் தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்குச் செல்கிறது.
தரமான காய்கள்: மேலும், காய்கள் நல்ல தரமாக உள்ளதால், வெளிமாநில, மாவட்ட வியாபாரிகள் நேரடியாக வந்து பீர்க்கங்காய்களைக் கொள்முதல் செய்து வருகின்றனர். கடந்தாண்டு மகசூல் அதிகரித்த நிலையில், விலை சரிவு ஏற்பட்டதால், விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. நிகழாண்டிலும் மகசூல் அதிகரித்துள்ள நிலையில் நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
» வணிகர் தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் 4-ம் தேதி ஷாப்பிங் திருவிழா
» சிறந்த தேயிலைக்கான ‘தங்க இலை' போட்டி - கண்ணன் தேவன் நிறுவனத்துக்கு 7 விருதுகள்
1,000 ஏக்கரில் சாகுபடி: இது தொடர்பாக விவசாயிகள் சிலர் கூறியதாவது: வேப்பனப்பள்ளியில் பகுதியில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் பீர்க்கங்காய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பீர்க்கங்காய் சாகுபடியில் ஓரளவுக்கு வருவாய் கிடைக்கிறது. ஒரு ஹெக்டேருக்கு 1.50 கிலோ முதல் 2 கிலோ வரை விதை தேவைப்படும்.
கொடி வளர்ந்தவுடன் பந்தல் போட்டு கொடியைப் படரவிடப்பட்டு, 50 முதல் 60 நாட்களில் முதல் காய்கள் அறுவடைக்குக் கிடைக்கும். தொடர்ந்து ஒரு வார இடைவெளியில் 10 முறை அறுவடை செய்யலாம். தற்போது மகசூல் அதிகரித்துள் ளது. அதேநேரம் தரத்தைப் பொறுத்து ஒருகிலோ ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனையாகிறது. இதனால், விவசாயிகளுக்கு போதிய வருவாய் கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
4 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
6 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago