உணவு ஆர்டருக்கு ரூ.2 வீதம் கட்டணம் வசூலிக்க தொடங்கிய ஸ்விகி!

By செய்திப்பிரிவு

சென்னை: ஒவ்வொரு உணவு ஆர்டருக்கும் ரூ.2 வீதம் பிளாட்பார்ம் கட்டணம் என்ற பெயரில் பயனர்களிடமிருந்து ஸ்விகி வசூலிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆர்டரில் உள்ள எண்ணிக்கையை சாராது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருவாயை அதிகரிக்கவும், செலவுகளை சமாளிக்கவும் இது நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

முதலில் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் நகரில் மட்டுமே இந்த கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகமாகி உள்ளது. மும்பை, டெல்லி போன்ற இந்தியாவின் மற்ற நகரங்களில் விரைவில் இது நடைமுறைக்கு வரும் என தெரிகிறது. ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்வது சரிவை கண்டுள்ள நிலையில் ஆர்டருக்கு கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகமாகி உள்ளது.

இன்றைய டிஜிட்டல் உலகில் வசித்து வரும் சிலரது வீட்டில் சமைக்க தக்காளி இருக்கிறதோ இல்லையோ. ஆனால், அவர்கள் பயன்படுத்தி வரும் போனில் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவன செயலிகள் நிச்சயம் இருக்கும். அதன் வழியே பசித்த நேரத்தில் தங்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து பசியை ஆற்றி கொள்ள முடியும். இந்த சூழலில் இந்தக் கட்டணம் அறிமுகமாகி உள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE