நிறுவனத்தை விரிவாக்க திட்டம்: 1,000 விமானிகளை நியமிக்கிறது ஏர் இந்தியா

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: கேப்டன், பயிற்சியாளர் உட்பட1,000-க்கும் மேற்பட்ட விமானிகளை பணியமர்த்த டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியாநிறுவனம் நடவடிக்கை மேற் கொண்டுள்ளது.

இதுகுறித்து ஏர் இந்தியா தெரிவித்துள்ளதாவது: ஏர் இந்தியா நிறுவனத்தில் தற்போது 1,800-க்கும் மேற்பட்ட விமானிகள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், விமானப் போக்குவரத்து, நெட்வொர்க் அமைப்புகளை பெரிய அளவில் விரிவுபடுத்ததிட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக,போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து மிக அகலமானஅமைப்பைக் கொண்ட 470விமானங்களை வாங்க ஆர்டர்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த விமானங்களை இயக்குவதற்கு கேப்டன், பயிற்சியாளர் என பல்வேறு பிரிவுகளில் ஆட்கள்தேவைப்படுகின்றனர். தற்போதைய நிலையில், 1,000-க்கும்அதிகமான விமானிகள் பல்வேறுபணிகளுக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். இவ்வாறு ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஏப்ரல் 17-ல்,விமானிகள் மற்றும் கேபின் பணியாளர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட இழப்பீட்டு கட்டமைப்பை உருவாக்கியது.

ஆனால், இதனை இந்திய வணிக விமானிகள் சங்கம் (ஐசிபிஏ) மற்றும் இந்தியன் பைலட்ஸ் கில்ட் (ஐபிஜி) ஆகிய இரண்டு பைலட் யூனியன்களும் நிரகாரித்து விட்டன.ஆனால், தொழிலாளர் நடைமுறைகளை மீறியதாக கூறப்பட்ட புதியஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்பாக ஏர் இந்தியா நிறுவனம்தங்கள் கருத்துகளை கேட்கவில்லை என அந்த 2 யூனியன்களும் கவலை தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE