மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் திங்கள்கிழமை வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 401 புள்ளிகள் (0.67 சதவீதம்) உயர்வடைந்து 60,056 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 119 புள்ளிகள் (0.68 சதவீதம்) சரிந்து 17,743 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகள் வாரத்தின் முதல்நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கின. இருந்தபோதிலும் தகவல் தொழில்நுட்பம், பார்மா பங்குகளின் விற்பனை அழுத்தத்தால் சரிவை நோக்கி பயணித்தன. காலை 10.26 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 26.30 புள்ளிகள் உயர்ந்து 59681.36 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 9.60 புள்ளிகள் உயர்வடைந்து 17,633.65 ஆக இருந்தது.
உலகளாவிய சந்தைகளின் பலவீனமான சூழல், மந்தமான பொருளாதார வளர்ச்சி மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனேயே இருந்தனர். ஆனால், ஹெவிவெயிட் நிறுவனங்களின் வலுவான காலாண்டு அறிக்கை, வங்கித்துறைகளின் ஏற்றம் போன்ற காரணங்களால் வர்த்த நேரத்தின் இறுதியில் வேகமெடுத்தப் பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாளை ஏற்றத்தில் நிறைவு செய்தது.
வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 401.04 புள்ளிகள் உயர்வடைந்து 60,056.10 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 119.40 புள்ளிகள் சரிந்து 17,743.40 ஆக இருந்தது.
» ஏப்.24, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு
» ஏற்றத்துடன் தொடங்கி சற்றே தடுமாறும் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 26 புள்ளிகள் உயர்வு
தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை விப்ரோ, ஐசிஐசிஐ பேங்க், டைட்டன் கம்பெனி, ஆக்ஸிஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, அல்ட்ரா டெக் சிமெண்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி, நெஸ்ட்லே இந்தியா, ஹெச்டிஎஃப்சி பேங்க், டாடா மோட்டார்ஸ், என்டிபிசி, டெக் மகேந்திரா, எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், கோடாக் மகேந்திரா பங்குகள் உயர்வடைந்திருந்தது. இன்டஸ்இன்ட் பேங்க், மாருதி சுசூகி, சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், பாரதி ஏர்டெல், எம் அண்ட் எம், இன்போசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago