இந்திய ஆடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் 26% பங்கை கொண்டுள்ள ஸ்பாட்டிஃபை!

By செய்திப்பிரிவு

சென்னை: முன்பெல்லாம் ஆகாசவாணி, சிலோன் ரேடியோ போன்றவை மக்களுக்கு தேவையானவற்றை ஒலிபரப்பி வந்தது. செய்தி, பாடல் என அதன் சேவை நீளும். அதன் பின்னர் டேப்ரெக்கார்டர் அதன் இடத்தை பிடித்துக் கொண்டது. பின்னர் சிடி பிளேயர், டிவிடி பிளேயர், எம்பி3 சாதனங்கள், செல்போன்கள் என பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது.

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஓடிடி ஆடியோ சேவைகள் மூலம் பன்மொழிகளில் பாடல், செய்திகள், கதை, கவிதை, சொற்பொழிவு, விவாதம் போன்றவற்றை கேட்டு வருகிறோம். ஸ்பாட்டிஃபை, கானா, ஜியோ சாவன், ரெஸ்ஸோ, விங்க், யூடியூப் மியூசிக், ஆப்பிள் மியூசிக் மற்றும் அமேசான் மியூசிக் என பல ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் இந்த சேவையை வழங்கி வருகின்றன.

ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும் சுமார் 1 மில்லியன் ஆடியோ ஸ்ட்ரீம்கள் பிளே செய்யப்படுவதாக ரெட்சீர் ஸ்ட்ராட்டஜி கன்சல்டன்ட்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த நிதி ஆண்டில் நாள் ஒன்றுக்கு 460 மில்லியன் ஆடியோக்கள் ஸ்ட்ரீம் செய்யப்பட்டுள்ளதாக தகவல். மேலும், இந்திய ஆடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் சுமார் 26 சதவீத பங்கை ஸ்பாட்டிஃபை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் இணைய பயன்படும், மலிவு விலையிலான மொபைல் டேட்டா மற்றும் பொழுதுபோக்குக்கான ஓடிடி ஆடியோ ஸ்ட்ரீமிங் பெற்று வரும் வளர்ச்சி ஆகியவை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த ஆடியோ ஸ்ட்ரீமிங் தளங்கள் கவனிக்கத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. முக்கியமாக பல்வேறு மொழிகளில் கன்டென்ட் கிடைப்பதும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE