ரம்ஜான் பண்டிகை: அய்யலூர் சந்தையில் ரூ.1.50 கோடிக்கு ஆடுகள் விற்பனை

By செய்திப்பிரிவு

அரூர்: அரூர் அருகேயுள்ள பொம்மிடி மற்றும் புழுதியூர் வாரச்சந்தைகளில் ரம்ஜான் பண்டிகையையொட்டி ஆடுகளின் விற்பனை அதிக அளவில் நடந்தது.

ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அரூர் பகுதிகளில் நடந்த வாரச்சந்தைகளில் ஆடு, கோழி விற்பனை அதிகளவில் நடந்தது.

பொம்மிடி அடுத்துள்ள வடசந்தையூரில் நேற்று நடந்த கால்நடை சந்தையில் அதிகளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

பொம்மிடி பகுதி மட்டுமின்றி கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி, வேப்பனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், திருவண்ணாமலை, செங்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் அதிகளவில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

ஆடுகளின் எடையைப் பொறுத்து ரூ.3 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. இதேபோல் மாடுகள் மற்றும் கோழிகளின் விற்பனையும் அதிக அளவில் நடந்தது. 600-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ. 42 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதே போல் நேற்று முன்தினம் நடந்த புழுதியூர் புதன் சந்தையில் 740-க்கும் மேற்பட்ட கால்நடைகள் ரூ.55 லட்சத்துக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

16 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

மேலும்