சென்னை: நாட்டின் மிகப்பெரிய தங்கம் மற்றும் வைர சில்லறை விற்பனைச் சங்கிலிகளில் ஒன்றான மலபார் கோல்டு & டைமண்ட், அட்சய திரிதியை பண்டிகையை ஒட்டி அற்புதமான தங்க நகைகள் கலெக்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.
அட்சயத் திரிதியை பண்டிகையை ஒட்டி வாடிக்கையாளர்கள் ரூ.30 ஆயிரம் மற்றும் அதற்கு மேல் மதிப்புள்ள நகைகளை வாங்கும்போது 100மிகி தங்க நாணயத்துக்குச் சமமான பரிசையும், வைரம், ரத்தினம் மற்றும் போல்கி நகைகளை வாங்கும்போது 250 மிகி தங்க நாணயத்துக்குச் சமமான பரிசையும் பெறலாம். இச்சலுகை 2023 மார்ச் 18 முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை செல்லுபடியாகும்.
மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் ஷோரூம்களில் விற்கப்படும் அனைத்து நகைகளும் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மனநிறைவை உறுதிப்படுத்தும் ஹால்மார்க் யுனிக் ஐடென்டிஃபிகேஷன் (HUID) எண்ணைக் கொண்டுள்ளன. மேலும், மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் வெளிப்படையான விலை, தர உத்தரவாதம் மற்றும் நியாயமான சேதாரத்தை (3.9% முதல்) வழங்குகிறது.
இதுகுறித்து மலபார் குழும தலைவர் எம்.பி.அகமது கூறும்போது, ``மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் தரம் ஆகியவற்றுக்கான பிராண்ட் ஆகும். இங்கு வாங்கும் ஆபரணங்களுக்கு வாழ்நாள் பராமரிப்பு, பழைய தங்க நகைகளை மாற்றும்போது பூஜ்ஜியம் சதவீத கழிவு, 100 சதவீத HUID சரிபார்க்கப்பட்ட BIS ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கம், IGI மற்றும் GIA சான்றளிக்கப்பட்ட வைரங்கள், உலகளாவிய தரநிலைகளின்படி 28 தரப் பரிசோதனை, பைபேக் உத்தரவாதம் ஆகியவற்றையும் வழங்குகிறது'' என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
9 mins ago
வணிகம்
13 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago