கோவை: ‘விஷு’ பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து கடந்த 7 நாட்களில் மொத்தம் 14 டன் எடையிலான காய்கறிகள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. ஒவ்வொரு முறையும் 3 டன் எடையிலான சரக்குகள் இந்த விமானத்தில் கொண்டு செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில், மலையாள புத்தாண்டு தினமான ‘விஷு’வை முன்னிட்டு கடந்த ஒரு வாரத்தில் காய்கறிகள் மட்டுமே அதிக அளவு கையாளப்பட்டுள்ளன.
இது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, ‘‘மலையாள புத்தாண்டை முன்னிட்டு கடந்த 7 நாட்களில் கோவையிலிருந்து வழங்கப்பட்ட 5 விமான சேவையில் மொத்தம் 15 டன் எடையிலான சரக்குகள் கோவையிலிருந்து ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இவற்றில் 14 டன் சரக்குகள் காய்கறிகளாகும்.
கோவக்காய், வாழைக்காய், பீன்ஸ், வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இவை தவிர்த்து 1 டன் எடையிலான மாங்காய் மற்றும் ரோஜாப்பூ, சூரியகாந்திப் பூ உள்ளிட்ட மலர்களும் ஏற்றுமதி செய்யப்பட்டன” என்றனர்.
தினமும் 25 விமானங்கள் இயக்கம்: கோவை விமான நிலையத்தில் தினமும் சென்னை, பெங்களூரு, டெல்லி, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் விமான சேவை வழங்கப்படுகிறது. தற்போது தினமும் 25 விமானங்கள் இயக்கப்படுகின்றன.
பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை கால விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் எதிர்வரும் நாட்களில் விமான சேவை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago