சென்னை:கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கம் கண்டுவந்த தங்கம் விலை புதிய உச்சம் தொட்டிருக்கிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.14) சவரனுக்கு ரூ.352 உயர்ந்து, ரூ.45,760-க்கு விற்பனையாகிறது.
உலகளவில் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கம், மத்திய வங்கிகளால் உயர்த்தப்படும் வட்டி விகிதங்கள் எனப் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தங்கம் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால் அதன் மீதான முதலீடுகள் உயர தங்கம் விலையும் அதிகரித்து வருகிறது. கடந்த 5ம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.45,520-க்கும் விற்பனையானது. அதனைத் தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வந்த தங்கம் விலை இன்று புதிய உச்சம் தொட்டிருக்கிறது.
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.44 அதிகரித்து ரூ.5,720-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.352 அதிகரித்து ரூ.45,760-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.49,344-க்கு விற்பனையாகிறது. இதேபோல், வெள்ளி விலையும் புதிய உச்சம் அடைந்திருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.83.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.83,000-ஆக இருக்கிறது.
முக்கிய செய்திகள்
வணிகம்
8 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
17 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago