2022-23 நிதியாண்டில் ரூ.36.65 லட்சம் கோடியாக ஏற்றுமதி அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் ஏற்றுமதி 2022-23நிதியாண்டில் ரூ.36.65 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று கூறியதாவது: கடந்த 2022-23 நிதியாண்டில் பெட்ரோலியம், மருந்து, கடல் உணவுப் பொருட்களின் ஏற்றுமதிசிறப்பான வளர்ச்சியை கண்டது.இதையடுத்து, அந்த நிதியாண்டில் நாட்டின் ஏற்றுமதி 6 சதவீதம் அதிகரித்து 44,700 கோடி டாலரை எட்டியது. இது, இந்திய மதிப்பில் ரூ.36.65 லட்சம் கோடியாகும்.

நாட்டின் இறக்குமதி கடந்த நிதியாண்டில் 71,400 கோடி டாலராக (ரூ.58.55 லட்சம் கோடி) இருந்தது. இது, 2021-22-ம் நிதியாண்டின் இறக்குமதியான 61,300 கோடி டாலருடன் ஒப்பிடுகையில் 16.5 சதவீதம் அதிகமாகும்.

சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதிகள் ஆகிய இரண்டும் இணைந்து புதிய உச்சத்தை கண்டுள்ளன. அதன்படி, 2022-23-ம் நிதியாண்டில் இவற்றின் ஏற்றுமதி 14 சதவீதம் அதிகரித்து 77,000 கோடி டாலரைத் தொட்டுள்ளது. 2021-22-ம் நிதியாண்டில் இது 67,600 கோடி டாலராகவும், 2020-21-ல் 50,000 கோடி டாலராகவும் இருந்தது.

இந்தியாவின் சேவைகள் ஏற்றுமதி 27.16 சதவீத வளர்ச்சியை பதிவுசெய்து 32,300 கோடி டாலரைத்தொட்டுள்ளது. இது, 2021-22-ல் 25,400 கோடி டாலராக மட்டுமே காணப்பட்டது.

சர்வதேச நாடுகளின் சந்தைகளில் இந்தியாவின் ஏற்றுமதி பங்களிப்பு கணிசமாக அதிகரித்து வருவதை கடந்த நிதியாண்டின் புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

1 hour ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

மேலும்