புதுடெல்லி: இந்தியாவில் 2022-23 நிதி ஆண்டில் கார் விற்பனை 27 சதவீதம் உயர்ந்துள்ளது. கார்களின் மொத்த விற்பனை தொடர்பான விவரங்களை இந்திய வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் (சியாம்) வெளியிட்டுள்ளது. அதன்படி, 2022-23 நிதி ஆண்டில் 39 லட்சம் கார்கள் டீலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2021-22 நிதி ஆண்டை விட 27 சதவீதம் அதிகம். அந்நிதியாண்டில் 31 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.
செமிகண்டக்டர் தட்டுப்பாடு குறைந்திருப்பதாலும் எஸ்யூவி வாகனங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் கார்களின் விற்பனை அதிகரித்து இருப்பதாக சியாம் அமைப்பு தெரிவித்துள்ளது. மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் கார் விற்பனை சென்ற நிதி ஆண்டில் உச்சம் தொட்டுள்ளது. மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை 2022-23 நிதி ஆண்டில் 19,66,164 ஆக உள்ளது. இது 2021-22 நிதி ஆண்டு விற்பனையைவிட 19 சதவீதம் அதிகம்.
முக்கிய செய்திகள்
வணிகம்
24 mins ago
வணிகம்
20 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago