பழநியில் 'வாட்டர் ஆப்பிள்' வரத்து அதிகரிப்பு: ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: பழநியில் சீசனை முன்னிட்டு பன்னீர் நாவல் (வாட்டர் ஆப்பிள்) அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனையாகிறது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், தாண்டிக்குடி, தடியன்குடிசை மற்றும் ஊட்டி, குற்றாலம் பகுதியில் வாட்டர் ஆப்பிள் என்று அழைக்கப்படும் பன்னீர் நாவல் சாகுபடி செய்யப்படுகிறது. வெண்மை மற்றும் இளஞ்சிவப்பு நிறத்தில் பழங்கள் உள்ளன. ஒரு பழம் 30 கிராம் எடை உடையது. இப்பழத்தில் பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ளன. தற்போது சீசன் என்பதால் கொடைக்கானல் மற்றும் குற்றாலம் பகுதியில் இருந்து பழநி பகுதிக்கு வாட்டர் ஆப்பிள் அதிகளவில் விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனையாகிறது.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், ''வாட்டர் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். நீர்ச்சத்து அதிகம், இனிப்பு சுவை குறைவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் விரும்பி வாங்குகின்றனர். வரத்து அதிகரித்தால் விலை இன்னும் குறைய வாய்ப்புள்ளது'' என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

21 mins ago

வணிகம்

6 hours ago

வணிகம்

5 hours ago

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

7 days ago

வணிகம்

7 days ago

மேலும்