ரஷ்யாவுக்கு போட்டியாக இந்தியாவுக்கு குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வழங்கும் இராக்!

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலைக்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதால், இராக்கும் இந்தியாவுக்கு விற்பனை செய்யும் கச்சா எண்ணெய் விலையை குறைத்தது.

ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. ரஷ்யாவிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் கச்சா எண்ணெயை வாங்குவதில்லை. இதனால் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் ரஷ்யா குறைந்த விலைக்கு அதாவது பேரல் ஒன்றுக்கு 72.14 அமெரிக்க டாலர் என்ற சராசரி விலையில் அதிகளவிலான கச்சா எண்ணெய்யை விநியோகிக்கத் தொடங்கியது. இது பெட்ரோலியப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு (ஒபெக்) சிக்கலை ஏற்படுத்தியது.

சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்தான் விலை அதிகமாக இருந்தது. கடந்த ஜனவரியில் பேரல் ஒன்றுக்கு 85.84 அமெரிக்க டாலராக இருந்த கச்சா எண்ணெய் பிப்ரவரியில் 87.66 டாலராக உயர்ந்தது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா படிப்படியாக அதிகரித்து. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை கடந்த ஜனவரியில் பேரல் ஒன்றுக்கு 78.92 அமெரிக்க டாலருக்கு வழங்கிய இராக், பிப்ரவரியில் அதன் விலையை 76.19 டாலராக குறைத்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE