விலை வீழ்ச்சியால் மதுரையில் முதல் தர தக்காளி 15 கிலோ ரூ.80-க்கு விற்பனை: மதிப்புக் கூட்டு ஆலைகள் அமையுமா?!

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: தக்காளி விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் மதுரையில் 15 கிலோ முதல் தர தக்காளியே ரூ.80-க்குதான் விற்பனையானது. கர்நாடகா, ஆந்திராவைபோல் மதுரையில் தென் மாவட்ட தக்காளி விவசாயிகளை காப்பாற்ற மதிப்புக் கூட்டு தொழிற்சாலைகள் அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அன்றாட சமையலில் தக்காளி தவிர்க்க முடியாதது. ஆனால், தக்காளி விலை நிலையற்றது. மற்ற காய்களை போல் தக்காளி விலையை கனிக்க முடியாது. இலேசான மழை பெய்தாலோ, அன்டை மாநிலங்களில் உற்பத்தி குறைந்தாலே தக்காளி விலை உயரும். அதுபோல் உற்பத்தி அதிகரித்தால் விலை வீழ்ச்சியடையும். தக்காளி இல்லாமல் சமையல் செய்ய முடியாது என்பதால் எந்த விலையில் விற்றாலும் மக்கள் தக்காளியை வாங்கி பயன்படுத்துவார்கள். இந்நிலையில், மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் முதல் தக்காளி விலை கடும் வீழ்ச்சியை அடைந்துள்ளது.15 கிலோ கொண்ட முதல் தர தக்காளியே ரூ.80-க்குதான் விற்கிறது. மூன்றாவது ரகம் ரூ.40-க்கு கூட வாங்குவதற்கு ஆளில்லை.

தக்காளிக்கு விலை கிடைக்காததால் சாகுபடி செய்த தென் மாவட்ட விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள். இது குறித்து மாட்டுத்தாவணி சென்ட்ரல் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் சின்ன மாயன் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள அனைத்து சந்தைகளுக்கும் தக்காளி வரவு அதிகமாகிவிட்டது. அதுபோல், கர்நாடகா, ஆந்திராவில் கடந்த ஆண்டு பெய்த மழையால் அங்கும் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதனால், இந்த மாநிலங்களில் இருந்தும், உடுமலைப்பேட்டை, தேனி, திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்து மதுரை மார்க்கெட்டிற்கு தக்காளி விற்பனைக்கு குவிந்துள்ளது.

ஆனால், குறைந்தப்பட்ச ஆதார விலை கூட விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. அதனால், தக்காளியை கீழே கொட்டுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தக்காளி விற்பனை இல்லை. உரம், மருந்து கூடுதல் விலைக்கு விற்கிறது. கூலியாட்கள் கூடுதல் கூலி கேட்கிறார்கள். அனைத்தும் சமாளித்து கடன் பெற்று முதலீடு செய்து உற்பத்தி செய்தால் தக்காளிக்கு விலை கிடைக்கவில்லை. கர்நாடகா, ஆந்திராவில் எவ்வளவுதான் விலை வீழ்ச்சியடைந்தாலும் தக்காளி விலை 15 கிலோ தக்காளி ரூ.70-க்கு கீழ் செல்லாது.

ஏனென்றால் அங்கு தக்காளியில் இருந்த ஜூஸ், சாஸ், ஜாம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. தக்காளி விலை குறைந்தால் விவசாயிகளுக்கு குறைந்தப்பட்ச ஆதார விலைக்கு அந்த தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து விடுவார்கள். அதனால், தக்காளி விலை வீழ்ச்சியடைந்தாலும் அம்மாநில விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள். தக்காளியை கீழே கொட்டுகிற சூழ்நிலையும் அம்மாநில விவசாயிகளுக்கு நேரிடாது. ஆனால், தமிழகத்தில் அதுபோன்ற தொழிற்சாலைகள் இல்லை. மதுரையில் அதுபோன்ற தொழிற்சாலைகளை அமைந்தால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்ட தக்காளி விவசாயிகள் பயன்பெறுவார்கள்.

மேலும், தக்காளி விளைச்சலுக்கு தேவையான உரம், மருந்துகளை மானிய விலையில் அரசு வழங்க வேண்டும். இந்த உதவிகளை அரசு செய்யாவிட்டால் அடுத்த 10 ஆண்டுகளில் தக்காளி விளைச்சல் அழிந்து தக்காளிக்கு கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களை தமிழகம் நம்பியிருக்கும் சூழ்நிலை உருவாகும்" என சின்ன மாயன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

20 hours ago

வணிகம்

1 day ago

வணிகம்

1 day ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

6 days ago

வணிகம்

10 days ago

வணிகம்

10 days ago

மேலும்