மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வியாழக்கிழமை) வர்த்தகம் சரிவுடனேயே தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 123 புள்ளிகள் சரிவடைந்து 59,565 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 31 புள்ளிகள் சரிந்து 17,525 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வியாழக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடனேயே தொடங்கியது. ரிசர்வ் வங்கியின ரெப்போ விகித அறிவிப்புக்கு பின்னர் லாபத்தை நோக்கிச் சென்றது. காலை 10:44 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 162.75 புள்ளிகள் உயர்வடைந்து 59,852.06 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 26.85 புள்ளிகள் உயர்வடைந்து 17,583.90 ஆக இருந்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்ட முடிவுகள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடனேயே தொடங்கின. ரெப்போ வட்டி விகித்தில் மாற்றம் இல்லை, 6.5 சதவீதமாகவே அது தொடரும் என்ற ஆர்பிஐ-ன் அறிவிப்பினைத் தொடர்ந்து பங்குச்சந்தைகள் லாபத்தை நோக்கி பயணிக்கத் தொடங்கின.
தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், இன்டஸ்இன்ட் பேங்க், எல் அண்ட் டி, பவர் கிரிடு கார்ப்பரேஷன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டிசிஎஸ், எம் அண்ட் எம் பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஆக்ஸிஸ் பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டைட்டன் கம்பெனி, ஐடிசி, டெக் மகேந்திரா, மாருதி சுசூகி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஐசிஐசிஐ பேங்க், சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சரிவில் இருந்தன.
முக்கிய செய்திகள்
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
5 days ago
வணிகம்
8 days ago
வணிகம்
9 days ago