ஏப்ரல் 3, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஏப்.3) சவரனுக்கு ரூ.200 குறைந்து, ரூ.44,280-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. முந்தைய வாரத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை சில நாட்களாக மெல்ல மெல்ல அதிகரித்தது.

இந்த நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,535-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.44,280-க்கு விற்பனையாகிறது. 24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.47,912 க்கு விற்பனையாகிறது.

இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.77.10-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.77,100-ஆக இருக்கிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE