இந்தியாவின் கடன் சுமை ரூ.150 லட்சம் கோடியானது

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியாவின் கடன் சுமை 2022-23 நிதி ஆண்டின் அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாம் காலாண்டு நிலவரப்படி ரூ.150.95 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது ஜூலை - செப்டம்பர் வரையிலான இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.6 சதவீதம் அதிகம் ஆகும். இரண்டாம் ஆண்டில் நாட்டின் கடன் ரூ.147.19 லட்சம் கோடியாக இருந்தது. கடன் வாங்கியதற்காக மத்திய அரசு வழங்கியுள்ள கடன் பத்திரங்களில் 28.29 சதவீத பத்திரங்களுக்கான காலவரையறை ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவானது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

10 ஆண்டுகால அடிப்படையிலான கடன் பத்திரங்களின் வட்டி விகிதம் மூன்றாம் காலாண்டில் 7.33 சதவீதமாக குறைந்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE