புதுடெல்லி: மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது.
கடந்த 2022-23-ம் நிதியாண்டில் இந்தியாவின் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ரூ.15,920 கோடி ஆகும். 2020-21-ல் ராணுவ வன்பொருள் ஏற்றுமதி ரூ.8,434 கோடியாகவும், 2019-20ல் ரூ.9,115 கோடியாகவும், 2018-19ல் ரூ.10,745 கோடியாகவும் இருந்தது.
இது 2017-18ல் ரூ.4,682 கோடியாகவும், 2016-17ல் ரூ.1,521 கோடியாகவும் இருந்துள்ளது. வரும் 2024-25 நிதி ஆண்டுக்குள் ராணுவ வன்பொருள் உற்பத்தி ரூ.1,75,000 கோடியாக இருக்க வேண்டும் என்றும், ஏற்றுமதி ரூ.35,000 கோடியாக இருக்க வேண்டும் என்றும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் உத்வேகம் அளிக்கும் தலைமையின் கீழ் வரும் காலங்களில் நமது ராணுவ வன்பொருள் ஏற்றுமதி மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும். உள்நாட்டிலேயே ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இவ்வாறு ட்விட்டரில் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
வணிகம்
23 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
8 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
23 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago