கோவை: கோவை தொழில் முனைவோர் தமிழகத்தில் உள்ள கிராமங்களை தத்தெடுக்க முன்வர வேண்டும் என ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
‘ராக்’ அமைப்பு மற்றும் கோவையில் உள்ள பல்வேறு தொழில் அமைப்புகள் சார்பில் மறைந்த தொழிலதிபர் சிஆர். சுவாமிநாதன் நினைவு விருது வழங்கும் நிகழ்ச்சி, மணி மேல்நிலைப்பள்ளியில் உள்ள நானி கலையரங்கில் நேற்று நடந்தது. ‘பிரிக்கால்’ நிறுவனத்தின் நிறுவனர் விஜய் மோகன் தலைமை வகித்தார். ஜோஹோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீதர் வேம்புவுக்கு, ‘சிஆர்எஸ்’ நிறுவனத்தை வளர்த்தவருக்கான விருது வழங்கப்பட்டது.
அதன் பின் அவர் பேசியதாவது: கோவை தொழில் நிறுவனங்கள் தேசிய அளவில் மட்டுமின்றி உலகளவிலும் தொழில்துறையில் முன்னோடியாக செயல்படுகின்றன. தமிழகத்தில் உள்ள பின் தங்கிய மாவட்டங்களிலும் தொழில்களை தொடங்க தொழில்முனைவோர் ஆர்வம் காட்ட வேண்டும். குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் மக்களில் 90 சதவீதம் பேர் சொந்த வீடு இல்லாத நிலையில் உள்ளனர்.
அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதுடன், தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளிலும் தொழில் வளர்ச்சி ஏற்படுத்த கோவை தொழில் முனைவோர் கிராமங்களை தத்தெடுக்க முன்வர வேண்டும். இன்று உதாரணமாக தொழில் நிறுவனங்களை ரூ.300 கோடி முதலீட்டில் தொடங்குவதை காட்டிலும் ரூ.3 அல்லது ரூ.5 கோடி செலவிட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு செயல்பட்டால் பல மடங்கு லாபத்தை பெற முடியும்.
» ராணுவ வன்பொருள் ரூ.15,920 கோடிக்கு ஏற்றுமதி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
» தங்க நகைகளுக்கு இன்று முதல் 6 இலக்க ஹால்மார்க் எண் கட்டாயம் - விலை பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு
கோவையில் மறைந்த தொழில திபர் சிஆர். சுவாமி நாதனுடன் இணைந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டோம். எதிர்பாராத விதமாக அவர் இறந்து விட்டார். உலகில் நான் எங்கு சென்று பேசினாலும் இந்தியாவுக்கு வாருங்கள் என்றும் குறிப்பாக கோவைக்கு வருகை தாருங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறேன்.
இதற்கு இப்பகுதியில் உள்ள ஆக்கபூர்வமான தொழில்முனை வோரின் செயல்பாடுகளே காரணமாகும். இவ்வாறு அவர் பேசினார். கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ‘ராக்’ அமைப்பின்தலைவர் பாலசுந்தரம் உள்ளிட்டபல்வேறு தொழில்துறையினர் பலர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
வணிகம்
31 mins ago
வணிகம்
1 hour ago
வணிகம்
8 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
10 hours ago
வணிகம்
15 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
18 hours ago
வணிகம்
21 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago