தக்காளி விலை சரிவு: ஒட்டன்சத்திரத்தில் ஒரு கிலோ ரூ.5-க்கு விற்பனை

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரத்தில் தக்காளி வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஒரு கிலோ ரூ.5-க்கு தக்காளி விற்பனையாவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், பழநி, வடமதுரை, அய்யலூர், தொப்பம்பட்டி, நத்தம் பகுதியில் அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இப்பகுதிகளில் நடவு செய்யப்பட்ட தக்காளி பயிர்கள் தற்போது காய்த்து குலுங்குகின்றன. இதனால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கடந்த சில தினங்களாக வரத்து அதிகரித்து வருகிறது.

கடந்த மாதம் ஒரு கிலோ ரூ.20-க்கும் குறையாமல் விற்பனையானது. தற்போது தினமும் வரத்து அதிகரிப்பால் விலை படிப்படியாக குறைந்து இன்று ஒரு கிலோ ரூ.5 முதல் ரூ.6 வரை விற்பனையானது. விலை சரிவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

ஒட்டன்சத்திரம் விவசாயிகள் கூறுகையில், "வரத்து அதிகரிப்பால் ஒரு பெட்டி (14 கிலோ) ரூ.50 முதல் ரூ.90 வரை விற்பனையாகிறது. மொத்த விலையில் ஒரு கிலோ ரூ.5-க்கு வாங்கி, வியாபாரிகள் வெளி மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனை செய்கின்றனர். இன்னும் வரத்து அதிகரித்தால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது" என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE