வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு: நகரங்கள் வாரியாக விலைப் பட்டியல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி 2024 நிதியாண்டின் துவக்க நாளில் இந்த விலை குறைப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது சிலிண்டர் விலையை உயர்த்தியும், குறைத்தும் அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகள் மாதத்தின் முதல் நாளில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இன்று (ஏப்ரல் 1) வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலைப்பட்டியலின்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை முன்பிருந்ததைவிட ரூ.92 குறைக்கப்பட்டுள்ளது.

நகரங்கள் வாரியாக விலை விவரம்:

டெல்லி ரூ.2028 கொல்கத்தா ரூ.2132 மும்பை ரூ.1980 சென்னை ரூ.2192.50

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

2 days ago

வணிகம்

2 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

3 days ago

வணிகம்

4 days ago

வணிகம்

5 days ago

வணிகம்

8 days ago

வணிகம்

9 days ago

மேலும்