புதுடெல்லி: நாட்டின் ஏற்றுமதியை 2030-ம்ஆண்டுக்குள் ரூ.164 லட்சம் கோடியாக அதிகரிக்கும் வகையில், வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023-ஐ மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
கடந்த 2015 ஏப்ரல் 1-ம் தேதி 5 ஆண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை அமலுக்கு வந்தது. அதன்பிறகு பல முறை நீட்டிக்கப்பட்டது. அந்த கொள்கை நேற்றுடன் முடிவடைந்து விட்டது.
இதனால் வெளிநாட்டு வர்த்தக கொள்கை 2023-ஐ மத்திய வர்த்த கமற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று வெளியிட்டார். இது இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதில் ஏற்றுமதியை 2030-ம் ஆண்டுக்குள் 2 டிரில்லியன் டாலராக (ரூ.164 லட்சம் கோடி) அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குனர் சந்தோஷ் சாரங்கி நேற்று அளித்து பேட்டியில் கூறியதாவது.
வழக்கமாக அறிவிக்கப்படும் 5 ஆண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை மாதிரி இல்லாமல், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வர்த்தக கொள்கையில் முடிவு தேதி இல்லை. தேவைப்படும் போது இதுகுறித்த புதிய தகவல்கள் வெளியிடப்படும். இந்த நிதியாண்டில் மொத்த ஏற்றுமதியை 760 முதல் 770 பில்லியன் டாலர் வரை (ரூ.63 லட்சம் கோடி) அதிகரிக்க முடியும் எனத் தெரிகிறது. கடந்த 2021-22-ம் ஆண்டில் இதன் மதிப்பு 676 பில்லியன் டாலராக (ரூ.55 லட்சம் கோடி) இருந்தது.
» தங்க நகைகளுக்கு இன்று முதல் 6 இலக்க ஹால்மார்க் எண் கட்டாயம் - விலை பவுனுக்கு ரூ.200 அதிகரிப்பு
கூரியர் சேவை மூலமாக நடைபெறும் ஏற்றுமதிக்கான மதிப்பு வரம்பு சரக்கு பார்சல் ஒன்றுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது.
புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், இந்திய ரூபாய், சர்வதேச கரன்சியாக மாற்றப்படுகிறது. சர்வதேச வர்த்தகத்துக்கான பணத்தை உள்நாட்டு கரன்சியில் வழங்கலாம்.
புதிதாக ஏற்படும் வர்த்தக சூழலுக்கு ஏற்றவகையில் 2023-ம் ஆண்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை ஆற்றல்மிக்கதாகவும், ஏற்புடையதாகவும் இருக்கும். இவ்வாறு சந்தோஷ் சாரங்கி கூறினார்.
புதிய வெளிநாட்டு வர்த்தக கொள்கையில், 4 புதிய சீர்மிகு ஏற்றுமதி நகரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கெனவே உள்ள 39 சீர்மிகு ஏற்றுமதி நகரங்களுடன் ஃபரிதாபாத், மொரதாபாத், மிர்சாபூர் மற்றும் வாரணாசி ஆகிய 4 நகரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் பயன்கள் இ-வர்த்தக ஏற்றுமதிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இ-வர்த்தக ஏற்றுமதி 200 முதல் 300 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
வணிகம்
7 hours ago
வணிகம்
7 hours ago
வணிகம்
9 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
16 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago