மும்பை: மும்பை பங்குச்சந்தையில் இன்று (வெள்ளிக்கிழமை) வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தக துவக்கத்தின்போது சென்செக்ஸ் 584 புள்ளிகள் உயர்வடைந்து 58,544 ஆக இருந்தது. இதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 161 புள்ளிகள் உயர்ந்து 17,242 ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. காலை 10:23 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 631.35 புள்ளிகள் உயர்வடைந்து 58,591.44 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 185.05 புள்ளிகள் உயர்வடைந்து 17,265.75ஆக இருந்தது.
சர்வதேச அளவில் வங்கி நெருக்கடிகளின் அச்சம் குறைந்து வருவதால், உலகளாவிய சந்தைகளில் நிலவிய சாதகமான சூழல்கள், வெளிநாட்டு நிதிவரத்து அதிகரிப்பு போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் வார இறுதி நாள் வர்த்தகத்தை ஏற்றத்துடனேயே தொடங்கின. அனைத்து வகைப் பங்குகளும் ஏற்றத்திலேயே இருந்தன.
தனிப்பட்ட பங்குகளைப் பொருத்தவரை ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஐசிஐசிஐ பேங்க், நெஸ்ட்லே இந்தியா, டாடா மோட்டார்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்,என்டிபிசி, இன்போசிஸ், டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல் பவர் கிரிடு கார்ப்பரேஷன், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ், ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், விப்ரோ, பாரதி ஏர்டெல், டிசிஎஸ், எம் அண்ட் எம், எல் அண்ட் டி பங்குகள் ஏற்றத்தில் இருந்தன. சன்பார்மா இன்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, டைட்டன் கம்பெனி, ஹிந்துஸ்தான் யுனிலீவர் பங்குகள் சரிவில் இருந்தன.
» மார்ச் 29, 2023 | தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு
» ஏப்.1 முதல் யுபிஐ பரிமாற்றத்துக்கு 1.1% கட்டணம் யாருக்கெல்லாம் பொருந்தும்? - ஒரு விளக்கம்
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
11 hours ago
வணிகம்
22 hours ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
1 day ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago