சரக்கு போக்குவரத்து செலவை 7.5 சதவீதமாக குறைக்க இலக்கு - மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு போக்குவரத்துக்கான செலவினத்தை 7.5 சதவீதமாக குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தெரிவித்தார்.

அசோசெம் அமைப்பின் ஆண்டுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு போக்குவரத்துக்கான செலவினம் தற்போது 13 சதவீதம் என்ற அளவில்உள்ளது. இதர உலக நாடுகளின்சரக்கு போக்குவரத்து செலவினமான 8 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் மிக அதிகம். சரக்குகளை கையாள்வதில் ஏற்படும் அதிகசெலவினம் இந்திய ஏற்றுமதியானது உலக அளவில் போட்டியிடமுடியாத சூழலை ஏற்படுத்துகிறது.

இதனை கருத்தில் கொண்டு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சரக்கு போக்குவரத்துக்கான செலவினங்களைகுறைப்பதில் தொடர்ந்து மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இதன் மூலம், அடுத்து வரும்ஐந்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சரக்கு போக்குவரத்திற்கான செலவினத்தை 7.5 சதவீதமாக குறைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு நிச்சயம் எட்டப்படும்.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு மாநிலங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல லட்சம் கோடியை செலவிட்டு வருகிறது. புதிய ரயில்வே லைன்கள் அமைப்பது, தற்போதுள்ள லைன்களை விரிவாக்கம் செய்வது, சரக்கு போக்குவரத்துக்கென தனிப் பாதை அமைப்பது உள்ளிட்டவற்றுக்காக ரூ.100 லட்சம் கோடி முதலீட்டை அரசு மேற்கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE