புதுடெல்லி: வங்கிகள் ஒரு கணக்கை மோசடி கணக்கு என அறிவிப்பதற்கு முன்பு கடன்பெற்றவரிடம் விசாரணை செய்ய வேண்டும் என்றும், அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும்போது வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு தெலங்கானா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஓய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இதனைத் தெரிவித்திருக்கிறது. அந்த அமர்வு தனது உத்தரவில், "ரிசர்வ் வங்கியின் மோசடி வழக்குகள் குறித்த வழிகாட்டுதல்களின்படி, ஒரு கணக்கை மோசடி கணக்கு என அறிவிப்பதற்கு முன்பு, கடன் வாங்கியவரிடம் விசாரணை நடத்த வேண்டும். ஏனெனில், மோசடி அறிவிப்பு கடன் வாங்கியவருக்கு பல சிவில் விளைவுகள் ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் மோசடி என அறிவிக்கும்போது முறையான நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி, முறைகேடுகள், போலியான பரிவர்த்தனை, ஏமாற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மோசடி என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
» 64 சட்ட திருத்தங்களைக் கொண்ட நிதி மசோதா - மக்களவையில் நிறைவேற்றம்
» ஜேக் டார்சியின் பிளாக் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதா? - ஹிண்டன்பர்க் அறிக்கை
முக்கிய செய்திகள்
வணிகம்
5 hours ago
வணிகம்
5 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
8 hours ago
வணிகம்
12 hours ago
வணிகம்
14 hours ago
வணிகம்
2 days ago
வணிகம்
2 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
3 days ago
வணிகம்
4 days ago
வணிகம்
4 days ago