சென்செக்ஸ் 398 புள்ளிகள் சரிவு 

By செய்திப்பிரிவு

மும்பை: இந்தியப் பங்குச்சந்தைகளில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 398 புள்ளிகள் (0.69 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 57,527 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 131 புள்ளிகள் (0.77 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 16,945 ஆக இருந்தது.

பங்குச்சந்தைகளில் வார இறுதி நாள் வர்த்தகம் ஏற்ற இறக்கமின்றி தட்டையாதத் தொடங்கியது. காலை 10:12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 57.01 புள்ளிகள் சரிவடைந்து 57,868.27 ஆக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 8.55 புள்ளிகள் சரிவடைந்து 17,068.35ஆக இருந்தது.

நாடாளுமன்றத்தில் புதிய திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்ட நிதி மசோதா-2023, டாலாருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு, வெளிநாட்டு நிதிகளின் வெளியேற்றம் போன்ற காரணங்களால் இந்திய பங்குச்சந்தைகள் இன்று வீழ்ச்சியுடனேயே நிறைவடைந்தன.

வர்த்தக நேரத்தின் இறுதியில் சென்செக்ஸ் 398.18 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 57,527.10 ஆக இருந்தது. அதேநேரத்தில் தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 131.90 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 16,945.05 ஆக இருந்தது.

தனிப்பட்ட பங்குகளைப் பொறுத்தவரை ஏசியன் பெயின்ட்ஸ், விப்ரோ பங்குகள் ஏற்றம் பெற்றிருந்தன. ஹெச்டிஎஃப்சி, ஹிந்துஸ்தான் யுனிலீவர், நெஸ்ட்லே இந்தியா, ஐடிசி, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எல் அண்ட் டி, ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், டாடா ஸ்டீஸ் பங்குகள் வீழ்ச்சி கண்டிருந்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE